சீரற்ற காலநிலை காரணமாக
நாட்டின் பல பகுதிகளில் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது.
04 பேர் பலி, 17 பேர் காயம், 5 பேர் மாயமாகியுள்ளனர்
நாட்டில்
ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக இதுவரை
04 பேர் பலி,
17 பேர் காயம்,
5 பேர் மாயமாகியுள்ளனர்என அறிவிக்கப்படுகின்றது.
நாட்டில்
ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக காலி
மாவட்டத்தில் 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அகுரல
பிரதேசத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற
07 மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.
மேல்
மாகாணம், தென்
மாகாணம், மத்திய
மாகாணம்,
ஊவா மாகாணம், ஆகிய மாகாணங்களில்
உள்ள பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை
இன்று (30) திட்டமிடப்பட்டிருந்த இறுதித்
தவணை பரீட்சைகள்
யாவும் பிற்போடப்பட்டுள்ளதாக
பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி,
மாத்தறை, அம்பாந்தோட்டை,
இரத்தினபுரி, நுவரேலியா, பதுளை, மொனராகலை மற்றும்
மாத்தளை ஆகிய
மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு
காரணமாக கொழும்பு
- பதுளை வீதியில்
போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
ஹப்புத்தளை
- பேரகலை பகுதியில்
இடம்பெற்ற மண்சரிவு
அனர்த்தத்தால் குறித்த வீதியில் போக்கு வரத்து
தடையேற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்.
சென்னை
மற்றும் பெங்களூருவில்
இருந்து பண்டாரநாயக்க
சர்வதேச விமான
நிலையம் நோக்கி
வந்த இரண்டு
விமானங்கள் காலநிலை சீரின்மையால் மத்தள ராஜபக்ச
சர்வதேச விமான
நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
பொகவந்தலாவ
எஸ்டேட், நோர்வூட்
ஆகிய பகுதிகளில்
வீடுகள் சில
வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதையடுத்து,
அப்பகுதியில் வாழும் சுமார் 68 குடும்பத்தினர் உடனடியாக
அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பதுளை
பண்டாரவளை பகுதியில்
மண்மெடு சரிந்து
விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெற்கு,
சபரகமுவ, மத்திய,
மேல் மற்றும்
ஊவா மாகாணங்களில்
சுமார் 100 முதல் 150 மில்லி மீற்றர் மழை
பெய்யலாம் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை,சுனாமி மற்றும் சூறாவளி ஏற்படபோவதாக சில வதந்நிகள் இடம்பெற்றுள்ளன இவை அனைத்தும் உண்மைக்குபுறம்பானவையாகும் என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியஷர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அனர்த்தம் ஏற்படுமாயின் அது தொடர்பாக முன்கூட்டியே பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று இடம் பெற்ற சீரற்றகாலநிலையினால் பல வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.இதே போன்று பெருந்தெருக்க்ளிலும் வீதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை அகற்ற நேற்று இரவு முதல் நடவடிக்கை மேற்கொண்டோம்.
தாழமுக்கம் காரணமாக தற்போதைய சீரற்ற நிலமை ஏற்பட்டுள்ளது மழையுடன் காற்றும் வீசியது இது குறித்த முன் அறிவிப்புக்களை நாங்கள் விடுத்திருந்தோம் என்றும் அமைச்சர் அனுர பிரியஷர்சன யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.