வர்த்தமானிக்கு எதிரான வழக்கு
நவ. 30 இல் எடுக்குமாறு மோசன்
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை , அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை
தொடர்பில் நிர்ணயம் செய்து, கடந்த 2017 பெப்ரவரி
மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2006/44 எனும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு
இடைக்கால தடை விதித்த வழக்கை நாளை மறுதினம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கக் கோரி
நகர்த்தல் பத்திரம்ஒன்று (motion) தாக்கல் செய்யப்பட்டுள்ளது
வாக்காளர்கள் 06 பேரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த நவம்பர் 22 ஆம் திகதி அறிவித்திருந்ததோடு, அது வரை அவ்வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை மிக விரைவாக நடாத்துவது தொடர்பில் கருத்திற்கொண்டு குறித்த வேண்டுகோளை சட்ட மா அதிபர் மோசன் ஒன்றின் மூலம் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிபிட்டிடிய, ஹாலிஎல ஆகிய மாகாண சபை எல்லைக்குட்பட்ட ஆறு பேரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment