133 உள்ளூராட்சி சபைகளுக்கு
திட்டமிட்டபடி தேர்தல்?
நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டுள்ள
வழக்கினால், உள்ளூராட்சித் தேர்தல்கள் பிற்போடடப்படும் நிலை
ஏற்பட்டுள்ள நிலையில், 133 உள்ளூராட்சி சபைகளுக்கு திட்டமிட்டவாறு
தேர்தலை நடத்த
முடியும் என்று
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்று
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடந்த, கட்சித் தலைவர்களின்
கூட்டத்தில், உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட
வர்த்தமானி அறிவிப்புக்கு, மேல்முறையீட்டு
நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் ஏற்பட்டுள்ள
நெருக்கடி குறித்து
ஆராயப்பட்டது.
இந்தக்
கூட்டத்தில் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹித தேசப்பிரிய, இந்த
வர்த்தமானி அறிவித்தலால் பாதிக்கப்படாத,
133 உள்ளூராட்சி சபைகளுக்கு ஏற்கனவே திட்டமிட்டவாறு தேர்தல்
நடத்தப்பட வேண்டும்
என்று குறிப்பிட்டார்.
தேர்தல்
ஆணைக்குழுவின்
அடுத்த கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்படும்
என்றும் அவர்
கூறியுள்ளார்.
எனவே,
வர்த்தமானி அறிவிப்பில் உள்ள தவறு தொடர்பாக,
நீதிமன்ற உத்தரவுகளால்,
உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டவாறு நடத்த முடியாது
போனாலும், 133 சபைகளுக்கு முதலில் தேர்தல்கள் நடத்தப்படும்
வாய்ப்பு உள்ளதாக
கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment