நீர்கொழும்பு மீனவரின் வலையில்

சிக்கிய அரிய வகைமீன்

கோடி ரூபா அதிஷ்டம்

மிகவும் அரிதான மீன் வகையை சேர்ந்த புளுபின் ரூனா (Bluefin Tune) என்ற மீன் ஒன்று நீர்கொழும்பு மங்குளி என்று கடற்பகுதியில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது.
230 கிலோவிற்கு மேற்பட்ட எடையைகொண்ட இந்த மீனின் சந்தைப்பெறுமதி 2 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பெரும்பாலும் பிடிக்கப்படும் இவ்வாறான மீன் விசேடமாக எலோவின் ரூனா என அடையாளம் காணப்படுகின்றது. புளுபின் ரூனா என்ற மிக அரிதான மீன் வகையாகும்.. இது சுவையானதாகவும் சிறந்த மீன் உணவாகவும் கருதப்படுகின்றது.இந்த மீன் கடலின் கரையோரப்பகுதியிலேயே பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் பிடிக்கப்பட்டவுடன் இதனை கொள்வனவு செய்வதற்கு கடலுக்குள் பலர் பிரவேசித்துள்ளனர். பொதுவாக இலங்கை கடல் வலயத்தில் காண்பதற்கு மிக அரிதாக இருக்கும் இவ்வாறான மீன் நியூசிலாந்து அட்லான்டிக் சமுத்திரம் மற்றும் கருங்கடல் பகுதியிலேயே காணப்படுவது விசேடஅம்சமாகும்.

உலகில் இவ்வாறான மீன் 6 வகையை கொண்டுள்ளது. இவற்றில் பாரிய ரூனா ரக மீன் புளுபின் ரூனாவாகும். இது பொதுவாக 450 கிலோவை கொண்டதாக இருக்கும். இதற்கு முன்னர் இவ்வாறான மீன் வெளிநாட்டில் பிடிக்கப்பட்டுள்ளது. அதன் எடை 679 கிலோவாகும் .


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top