தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களைச்

சந்தித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

தென்கொரியாவிற்கான மூன்று நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (28) பிற்பகல் சியோல் நகரில் தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்தார்.
தென்கொரியாவில் தொழில் புரியும் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் இலங்கையர்கள் பெருந்தொகையானோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
2015 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை நிறைவேற்றுவதில் காணப்படும் சவால்களையும் இடையூறுகளையும் எதிர்கொண்டு செயற்படுவதற்காக Nam San Hall Ground Hyatt இலங்கை சங்கம் ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது பாராட்டுத் தெரிவித்ததுடன் தென்கொரியாவிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிப்பத்திர முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்காக கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கைத் தொடர்பாகவும் பாராட்டுத் தெரிவித்தனர்.
தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் புதிய இணையத்தளமும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, திலக் மாரப்பன, தயா கமகே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மலிக் சமரவிக்ரம, தலதா அத்துகோரல ஆகியோரும் தென்கொரியாவுக்கான இலங்கைத் தூதுவர் மனிஷா குணசேக்கர உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top