இலங்கைக்கு அருகாமையில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டைச் சுற்றி வானம் முகில் கூட்டத்துடன் காணப்படும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெரும்பாலான மாகாணங்களில் இடம்பெறக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் ஐம்பது கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும்.
இடி மின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment