தென்கொரியாவின் தலைநகர் சியோலில்
ஜனாதிபதியின் பங்கேற்புடன்
வெற்றிகரமான வர்த்தக மன்றம்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் மிகவும் வெற்றிகரமானதொருவர்த்தக மன்றம் இன்று (29) தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட கொரிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்காசிய பிராந்திய முன்னணி கம்பனிகளின் சிலஉள்நாட்டுப் பிரதிநிதிகள் இவ்வர்த்தக மன்றத்தில் பங்குபற்றினர். சியோலில் உள்ள ஹயாத் கிரான்ட்ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 20 முன்னணி இலங்கை வர்த்தக பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த வர்த்தக மன்றத்தில் தென்கொரியாவின் KBIZ, KCCI, KITA, FKI மற்றும் AHPEK ஆகியநிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட முன்னணி கொரிய தொழில்முயற்சியாளர்கள்பங்குபற்றினர்.
நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய KBIZ தலைவர் பார்க் சுங்-டீக் (PARK SUNG-TAEK)இலங்கையில் தனது வெற்றிகரமான முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கியதுடன், இலங்கைமுதலீட்டுக்கு சிறந்த நாடு என்றும் இலங்கையில் அச்சமின்றி முதலிடுவதற்கு முன்வருமாறுகொரிய கம்பனிகளுக்கு அழைப்புவிடுத்தார்.
இலங்கையின் முதலீட்டு கொள்கைகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான உதவிகள்குறித்து அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமஉரையாற்றினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.