Tradmed International 2017 கண்காட்சி மற்றும் மாநாடு
நாளை பத்தரமுல்லயில்
உள்ள
வோட்டஸ் எட்ஜில் ஆரம்பம்
Tradmed International 2017 என்ற சர்வதேச கண்காட்சியும் மாநாடும் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
தேசிய வைத்தியத்துறை முறை குறித்தும் ஏனைய வைத்தியத்துறைகள் தொடர்பாகவும் நடைமுறை ,பாவனை, பெறுமதி ,மேம்பாடு குறித்தும் புதிய கண்டுபிடிப்புக்கள் குறித்தும் பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக இந்த மாநாடு நாளை பத்தரமுல்லயில் உள்ள வோட்டஸ் எட்ஜில் ஆரம்பமாகவுள்ளது.
சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு , சர்வதேச சுகாதார அமைப்பு , ஆயுர்வேத திணைக்களம் மற்றும் தொழிற்துறை வர்த்தகசபை ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து கண்காட்சியும் மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இதுதோடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாளை காலை இது தொடர்பிலான ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இக்கண்காட்சி எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை நிறைவடையவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிறைவுவைபவம் இடம்பெறவுள்ளது.
கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடமுடியும். 50 இற்று மேற்பட்ட நாடுகள், சுதேச வைத்தியத்துறை குறித்தும் ஏனைய வைத்தியத்துறை குறித்த புத்தி ஜீவிகள் ,வைத்தியர்கள் ,சுகாதார அமைச்சர்கள் , சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர் மாநாட்டில் கல்நதுகொள்ளவுள்ளனர். கண்காட்சி 100 கூடங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
சர்வதேச ஆயுர்வேத தயாரிப்பு நிறுவனங்களும் காட்சிக்கூடங்களை அமைத்துள்ளன. ஒவ்வொரு நாளும் சுதேச வைத்திய முறை தொடர்பாக ஒவ்வொரு நாடுகளும் அது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தும் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.
0 comments:
Post a Comment