அமைச்சர் ரிசாத் பதியுதீனின் நிதி உதவியில்

அட்டாளைச்சேனையில் கொங்கிரீட் வீதி

மக்கள் நன்றி தெரிவிப்பு
   
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிசாத் பதியுதீனின்  3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனையில் வீதி ஒன்று கொங்கிரீட் வீதியாக  அமைக்கப்பட்டு வருகின்றது.
அட்டாளைச்சேனை, புறத்தோட்டம் பாத்திமா அறபிக்கல்லூரி வீதியில் அதிகமான மக்கள் உள்ள பிரதேசம் இதுவரை காலமும் குண்டும் குழியுமாக காணப்பட்டதை அடுத்து அட்டாளைச்சேனை பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் அல்-ஹாஜ் சமீர் ஹாஜியினல் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்களினால் இவ்வீதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது இவ்வீதியின் வேலைத்திட்டங்கள் நிறைவுபெறவுள்ளதுடன் கொங்கிட்டினால் இடப்பட்ட பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகின்றது.

பாதை திருத்தத்திற்கு உதவிய அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அப்பிரதேச மக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளதுடன் அல்லாஹ்விடமும் (துஆ) பிரார்த்தனை செய்கின்றனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top