மக்களுக்கு எச்சரிக்கை !
வங்காள விரிகுடாவின் தாழமுக்கம்
இலங்கையை பாதிக்கும்
மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டு வரும் தாழமுக்கம் இலங்கையின் கரையோரங்களையும், தென்னிந்தியாவையும் அதிகளவில் பாதிக்கும் சாத்தியம்
உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களில் இன்றும்(25) நாளையும் அதிகளவு மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வகையில், வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இந்த மழைவீழ்ச்சியின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கும் போலவே தெற்காசியாவின் பல நாடுகளுக்கும் இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கம் இருக்கும் என அமெரிக்க காலநிலை அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment