பிரகாசமாக மாறிய தெற்காசியாவின்
மிக உயரமான தாமரை கோபுரம்
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மிகவும் உயரமான தாமரை கோபுரம் பிரகாசமாக காட்சியளித்துள்ளது.
தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமாக தாமரை கோபுரம் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
கோபுரத்தின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் தாமரை கோபுரம் நேற்றிரவு மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்துள்ளது.
கொழும்பு சுற்றுவட்டத்திலுள்ள மக்களால் தாமரை கோபுரத்தின் வெளிச்சத்தை காண முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இலங்கையில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோபுரத்தின் ஊடாக சீனா வேவு பார்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மஹிந்த ஆட்சியின் போது தாமரை கோபுரத்தின் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment