புதுடில்லி இந்திராகாந்தி விமானநிலையத்தில்
பிரதமருக்கு அமோக வரவேற்பு
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பகல் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தினூடாக புதுடில்லியைச் சென்றடைந்தார்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை இந்தியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தலைமை ஒழுங்குமரபு அலுவலர் சஞ்ஜே வர்மா மற்றும் பிரதி ஒழுங்குமரபு அலுவலர் அபிசேக் குக்லா ஆகியோர் வரவேற்றனர்.
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சித்ராங்கனீ வகீஷ்வர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ தரஞ்சித் சிங் சன்து ஆகியோர் இதில கலந்துகொண்டனர்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட பாதுகாப்புக்கு மத்தியில் வாகனப் பேரணியாக புதுடில்லி நகர தாஜ் பெலஸ் ஹோட்டலுக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் சென்றடைந்தனர்.
இவர்களை புதுடில்லி இலங்கை உயர் ஸ்தானிகர் அலுலக அதிகாரிகள் , தாஜ் பெலஸ் முகாமைத்துவம், செனால்யா பொன்சேகா மற்றும் கவிந்து ரணவக ஆகியோர் வரவேற்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய அரச தலைவர்;களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
நாளை (23) புதுடில்லி எரோசிட்டியில் இந்தியப் பிரதமரின் தலைமையில் ஆரம்பமாகும் 5 ஆவது உலக சைபர் இணையத்தள வெளி மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.