மாணவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு

Unique Student Code, Finger Print



அரசாங்க பாடசாலைகளுக்கு உள்வாங்ப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும் பரீட்சை நடவடிக்கையின் போதும் பரீட்சாத்திகளின் பரீட்சை நடவடிக்கைளை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்கான நடைமுறையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பரீட்சை திணைக்களத்தின் நடவடிககைகளை மேலும் விரிவுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைக்க புத்திஜீவிகளை கொண்ட குழுவொன்று நியமித்திருந்ததார். இந்த குழுவினால் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் இலக்கமொன்றை (Unique Student Code) அறிமுகம் படுத்தவும் அதனுடன் கைவிரல்(Finger Print)அடையாளத்தின் மூலம் ஆள் அடையாளத்தை உறுதி செய்து அதனுடாக கியூ ஆர் QR குறியீடு ஒன்றை தயாரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கம் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய வெட்டுப்புள்ளி பரீட்சைகளின் பயன்படுத்துவதற்கும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடாக முக்கிய வெட்டுப்புள்ளி பரீட்சைகளான தரம் 5 புலமைபரிசில் பரீட்சை கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சை கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை ஆகிய பரீட்சைகளின் போது மாணவர்களின் செயல்த்திறன் ஆற்றல்களை கண்காணிக்கவும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதே போன்று பரீட்சை மோசடியை தடுக்கவும் இது பெரும் பயனுள்ளதாக அமையும்.இதற்கு மேலதிகமாக விடைமதிப்பீட்டு பரிசோதனையின் போதும் செயல்த்திறன் பரீட்சைக்கும் நவீன தொழிநுட்பத்துடனான ஓசிஆர் OCR  இயந்திரத்தை (Optical Character Readers) கொள்வனவு செய்யவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் செயல்த்திறன் விடைப்பத்திரத்தை மதிப்பீடு செய்வதற்கான காலம் குறைவடைவதுடன் விரைவாக பெறுபேறுகளை வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top