நஷ்டத்தில் இயங்கி வந்த கைத்தொழில் மற்றும்
வணிக அமைச்சின் கீழான நிறுவனங்களை
இலாப மீட்டச் செய்துள்ளோம்
பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத்
நஷ்டத்தில்
இயங்கி வந்த
கைத்தொழில் மற்றும்வணிக அமைச்சின் கீழான நிறுவனங்களை இலாப மீட்டச்
செய்துள்ளோம் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்துகையில் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்ந்து
பேசுகையில் மேலும் கூறியதாவது,
எங்கள் அமைச்சின் கடமைகளை மிகவும் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் கடந்த
காலங்களில் நாங்கள் செய்து வந்திருக்கின்றோம். எங்களிடத்தில் பல நிறுவனங்களை
இந்நாட்டின் கெளரவ ஜனாதிபதி அவர்களும்
கெளரவ பிரதமர் அவர்களும் ஒப்படைத்த பொழுது சில நிறுவனங்கள் எந்த ஒரு
காலத்திலும் இலாபம் ஈட்ட முடியாத நிறுவங்களாக
இழுத்து மூடப்பட வேண்டிய நிறுவனங்களாக இருந்தன். இவைகள் இன்று இலாபம்
ஈட்டுகின்ற மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றுகின்ற நிறுவனங்களாக மாறியுள்ளன.
அதற்குரிய வாய்ப்பை இறைவன் எங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளான்.
எனவே, அந்த வகையில் லங்கா சதோச நிறுவனம் இது போன்ற இன்னோரன்ன நிறுவனங்களும்
சீனிக் கூட்டுத்தாபனம் நஸ்டம் அடைந்த நிறுவனம் 2 பில்லியன் ரூபா இலாபம்
ஈட்டக்கூடிய நிறுவன்மாக மாற்றமடைந்துள்ளது.
அதேபோன்று ஒவ்வொரு மாதமும் 300 மில்லியன் ரூபா நட்டத்தை தந்து கொண்டிருந்த லங்கா
சதோச நிறுவனத்தை இன்று இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியிருக்கின்றோம். இதேபோன்று
எல்லா நிறுவனங்களும் இலாபம் ஈட்டுகின்ற நிறுவனங்களாக மாற்றமடைந்திருப்பதை
இவ்விடத்தில் சந்தோஷத்துடன் கூற விரும்ப்புகின்றேன்.
இது மாத்திரமல்லாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கைத்தொழில் சாலைகள் போதாது என்ற விடயங்களும் யுத்ததில் அழிந்துபோன கைத்தொழிற்சாலைகளையும் 2018 ஆம் ஆண்டில் மீளக்
கட்டியெழுப்புவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கின்றோம்.
கெளரவ ஜனாதிபதி அவர்களும் கெளரவ பிரதமர் அவர்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கைத்தொழில் பேட்டைகளை அமைத்து அங்கு வாழும்
இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக எங்கள் அமைச்சின் ஊடாக
இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எங்களுக்கு உதவி வருகின்றார்கள்.
எதிர்வரும் வாரம் இது சம்மந்தமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற
உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் விசேட கூட்டங்களை
நடத்தி இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பட்டதாரி இளைஞர்கள்,
யுவதிகள் வேலைவாய்ப்பு கேட்டு பாதைகளில் அமர்ந்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவதைக் கண்டு வேதனைப்படுகின்றோம்..
எப்படியாவது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களிடத்திலும் இந்த அரசாங்கத்திடமும்
அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான திடங்களை வகுத்து
செயல்படுமாறு நாங்கள் வேண்டியிருக்கின்றோம்.
எதிர்காலத்தில் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக வடக்கு,
கிழக்கு மாகாணங்களில் மாத்திரமல்லாமல் நாட்டிலுள்ள அனைத்து பட்டதாரிகளினதும்
தொழில் வாய்ப்புகளுக்கான பாரிய திட்டங்களை வகுத்து செயல்படவிருக்கின்றோம்.
அடுத்தவாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து
போராட்டத்தில் இருக்கும் பட்டதாரிகளைச் சந்தித்து அவர்களின் தீர்வுக்காக
முயற்சிக்க எண்ணி இருக்கின்றோம்.இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.