சம்மாந்துறை வைத்தியசாலையில்
அன்வர் இஸ்மாயிலின் பெயர் படுகொலை..!
சம்மாந்துறையின் தவப் புதல்வன், மக்களால் என்றும் மதிக்கப்படும் உயர் மகன்- மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலை மீண்டும் படுகொலை செய்துவிட்டனர் சில காழ்ப்புணர்ச்சி கொண்ட வக்கிர கூட்டமொன்று.
சம்மாந்துறையில் இன்று காலை நேரம் அந்த கொடூரத்தை அதே மண்ணைச்சேர்ந்த கொடூரர்கள் அரங்கேற்றியுள்ளனர்.
"அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை" என பெயர் சூட்டப்பட்டிருந்த பிரம்மாண்ட பெயர்ப் பலகையை கழட்டி தூக்கி மூலையில் போட்டுள்ளார்கள்.
அன்வர் இஸ்மாயில் எனும் அரசியல் ஆளுமையை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் சம்மாந்துறை மக்களுக்கு - இந்த வக்கிர சம்பவம் பேரிடியாக விழுந்துள்ளது.
சம்மாந்துறையின் பலமிக்க அரசியல்வாதியால்- அவரது நேரடி வழிகாட்டலில் இந்த அகோரம் தாண்டவமாடியுள்ளது.
மாகாண அதிகாரம் இல்லாமல் போயுள்ள இவ்வேளையில் இந்த கொடூரம் இடம்பெற்றுள்ளது என்பது சிந்தனைக்குரிய விடயமாகும்.
மாகாண அதிகாரம் இருந்திருக்குமேயானால் இந்த கொடூரம் இடெம்பெற அனுமதிக்கப்பட்டிருக்கமாட்டாது.
அன்வர் இஸ்மாயில் என்ற நாமத்துக்கு இன்று ஏற்படுத்தப்பட்ட அவமானம் முழு சம்மாந்துறை மக்களை மட்டுமன்றி- கட்சி பேதங்களுக்கு அப்பால் அன்னாரை நேசிக்கும் முழு அம்பாறை மாவட்ட மக்களையும் அவமானப்படுத்தியுள்ளது மட்டுமன்றி ஆவேசத்தையும் உண்டு பண்ணியுள்ளது.
இந்த கொடூரத்தின் பின்னணியில் இருந்த அந்த பலமிக்க அரசியல்வாதி ஒன்றை மட்டும் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
" நாளை உங்களுக்கும் மரணம் வரலாம். அதன் பின்னர்- நீங்கள் செய்த அபிவிருத்திகளை இதேபோன்று தூக்கி எறிந்தால் உங்களது குடும்பமும் உங்கள் ஆதரவாளர்களும் அபிமானிகளும் எவ்வளவு வேதனை படுவார்கள் என்பதை உங்கள் மனசாட்சியை தொட்டு கேட்டுக்கொடுங்கள்."
சம்மாந்துறை மக்களே சிந்தியுங்கள்,
ஏ. எச். எம். பூமுதீன்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.