வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும்
– சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த அணி நிபந்தனை
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதானால், ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறி, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளது மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலான கூட்டு எதிரணி.
இதுதொடர்பாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே கருத்து வெளியிடுகையில்,
“ஐதேகவுடன் கூட்டு அரசாங்கத்தில் இருந்து கொண்டே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி,உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு எதிரணியுடன் இணைந்து போட்டியிட முடியாது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேசுவதற்கு நாங்கள் குழுவொன்றை அமைத்துள்ளோம். ஆனாலும், இவை எமது நிபந்தனைகள்.
இந்த நிபந்தனைகளுக்கு அவர்கள் இணங்காவிடின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ஊடாக கூட்டு எதிரணி, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும்.
கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த நிபந்தனைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment