பொஸ்னியாவில் இலட்சக்கணக்கான
முஸ்லிம்களை கொன்ற குற்றவாளி
இராணுவத் தளபதி நீதிமன்றில் தற்கொலை
பொஸ்னியப்
போரில் இன
இழிப்புக் குற்றச்சாட்டுக்கு
இலக்காகி, சர்வதேச
நீதிமன்றத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பொஸ்னிய
இராணுவத் தளபதி,
தீர்ப்பு வாசிக்கப்படவிருந்த
சமயத்தில் நீதிமன்றில்
வைத்தே நஞ்சருந்தித்
தற்கொலை செய்துகொண்ட
சம்பவம் நெதர்லாந்தில்
பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
பொஸ்னியாவில்
வாழ்ந்து வந்த
முஸ்லிம்களை, 1990களில் நாட்டை விட்டு விரட்டியும்
கொலை செய்தும்
இன அழிப்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஸ்லோபொதான் ப்ரல்ஜாக் என்ற
பொஸ்னிய இராணுவ
முன்னாள் தளபதி
உட்பட, க்ரோஷியாவைச்
சேர்ந்த ஐந்து
அரசியல்வாதிகளுக்கும் 20 ஆண்டு கால
சிறைத் தண்டனை
வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்தத்
தீர்ப்பை எதிர்த்து
ஸ்லோபொதான் மேன்முறையீடு செய்திருந்தார்.
அதன் மீதான
விசாரணைகள் நிறைவுற்ற நிலையில், அவர் குற்றவாளி
என்பது மீண்டும்
நிரூபணமானது. இதையடுத்து அவர் மீதான தீர்ப்பு
வாசிக்கப்படவிருந்தது.
அப்போது
திடீரெனப் பேச
ஆரம்பித்த ஸ்லோபொதான்,
தாம் நிரபராதி
என்றும் இன
அழிப்பில் ஈடுபடவில்லை
என்றும் தாம்
ஒரு போர்க்
குற்றவாளி அல்ல
என்றும் கூறியதுடன்,
கையில் வைத்திருந்த
சிறு குப்பியில்
இருந்த கருமையான
திரவத்தை அருந்தினார்.
பிரதம
நீதிபதி இதைக்
கண்ணுற்றபோதும் சந்தேகம் ஏதும் எழாமையால் அவர்
தீர்ப்பை வாசிக்கத்
தொடங்கினார். ஒரு சில நொடிகளுக்குள், ஸ்லோபொதான்
நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து
ஸ்லோபொதானின் சட்டத்தரணி “எனது சாட்சிக்காரர் விஷமருந்திவிட்டார்”
எனக் கூச்சலிட்டார்.
இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக
நீதிபதி அறிவித்தார்.
உடனடியாக
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும்
சிகிச்சை பலன்
தராத நிலையில்
அவர் உயிரிழந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.