2013 ஆம் ஆண்டு மே மாதம்
சாய்ந்தமருது கடற்கரைப் பூங்காவில்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமர்ந்திருந்த மேடையில்
மாகாண சபை உறுப்பினர் ஜவாத் ஆவேசம்
பொலிஸ்காரனிடம் இருக்கும் ஆயுதத்தை எடுத்து மேடையில் இருக்கும் அனைவரையும் சுட்டுத்தள்ள வேண்டும் என ஆசைப்படுகின்றேன் இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸ்ஸாக் (ஜாவாத்) "கல்முனைத் தொகுதியில், மண்ணெல்லாம் மாண்புறும் அபிவிருத்திகள்" நிகழ்வின் இறுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் மிகவும் ஆவேசமாக உரை நிகழ்த்தினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருந்த இக்கூட்டத்தில் கே.எம்.அப்துல் றஸ்ஸாக் (ஜாவாத்) மேலும் பேசுகையில்,
முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஆயிரம் குளறுபடிகள் இருக்கிறது. பணமும் பதவியும் முஸ்லிம் காங்கிரஸிற்குள் அதிகரித்து விட்டது. அதைத் தடுப்பதற்காக.. போராடிக் கொண்டிருக்கின்றோம்.. பேசிக்கொண்டிருக்கின்றோம்....... சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றோம்..... வாதிட்டிக் கொண்டிருக்கின்றோம்....
நான்கூறிய வார்த்தைகளை கேட்டு இந்த தலைவர் இன்னும் "என்னை பார்த்து சிரிக்கச் சிரிக்கப் பேசுகின்றார் என்றால்....இவர்தான் தலைவர்...,
எனக்கு ஒரே ஒரு ஆசைமட்டும்தான் இருக்கிறது...
ஒரு மேடையில் தலைவர் அடங்களாக நீங்கள் எல்லோரும் இருக்க வேண்டும்.... ஒரு பொலிஸ்காரன் நிற்க வேண்டும்.... அவனிடம் ஒரு ஆயுதம் இருக்க வேண்டும் அந்த ஆயுதத்தை பாவிக்கும் முறை தெரிந்தவன் நான்,....அதை எடுத்து உங்கள் அனைவரையும் சுட்டுத்தள்ள வேண்டும் என ஆசைப்படுகின்றேன் இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸ்ஸாக் (ஜாவாத்) தெரிவித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் சாய்ந்தமருது கடற்கரைப் பூங்காவில்இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸ்ஸாக் (ஜாவாத்) இப்படியும் ஒரு உரை நிகழ்த்தியிருந்தார்.
இரத்தங்கள் சிந்தி உருவாக்கப்பட்டதுதான்
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சி தடம்புரண்டு போகுமேயானால்
யா அல்லாஹ் இக்கட்சியை அழித்து விடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு உருவாக்கப்பட்ட கட்சி. இக்கட்சி தனது இலட்சியப் பாதையிலிருந்து தடம் புரண்டு போகுமேயானால் மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் சொன்னார், இக்கட்சியை அழித்துவிடு யா அல்லாஹ் அது நிச்சயம் நடக்கும்.
இக்கட்சி தொடர்பாக இன்னும் ஒன்றையும் மாமனிதர் கூறினார். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் ஏந்தும் துப்பாக்கிகள் தலைவர்களை நோக்கி குறி திரும்பும் என்றார். அது நடக்கும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் 1986 ஆம் ஆண்டுகளில் எங்கள் உடல்,பொருள், ஆவி என்பனவற்றை அர்ப்பனித்து இக்கட்சியை ஆரம்பித்தவர்கள் நாங்கள்.
இக்கட்சிக்குள் யாரும் வரட்டும் போகட்டும் அவர்கள் எதையும் கூறட்டும் கூறாமலும் விடட்டும். கட்சிக்குள் நடிக்கட்டும் நடிக்காமலும் விடட்டும் அதப்பற்றியெல்லாம் எங்களுக்கு எதுவித கவலையும் இல்லை.
ஆனால் கட்சி தொடர்பாகவும் எங்களுக்கு எதிராகவும் தேவையற்ற வசனங்களைப் போட்டு அறிக்கைகள் விடும்போது எதிர்த்துப் பேசுகின்ற, எழுதுகின்ற வல்லமை எங்களுக்கும் இருக்கின்றது. அதனை செய்தே தீருவேன். இது தொடர்பாக எந்த தலைவன் எதிர்த்தாலும் கேட்கப்போவதில்லை.
இக்கட்சியை வழி நடத்துபவன் எம்மையெல்லாம் படைத்த அல்லாஹ். அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இக்கட்சியிலுள்ள பிரள்வுகளை அவன் சகித்துக் கொண்டிருக்கின்றான். சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியாகத் திருத்துவான். இல்லையேல், பூண்டோடு அழிப்பான்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களாகிய நாங்கள் இப்படி மேடையில் ஒன்றாக அமர்ந்து இருக்கும் போது புஸ் என்று பறப்போம். இது நடக்கும். இது சாதாரணமாக உருவாக்கப்பட்ட கட்சியல்ல. இரத்தங்கள் சிந்தி உருவாக்கப்பட்ட கட்சி. இக்கட்சியை தமது சுகத்திற்காகவும் சுய நலத்திற்காகவும் பாவிப்பவர்கள் அழிக்கப்படுவார்கள். அசிங்கப்படுத்தப்படுவார்கள் இது நிச்சயம் நடந்தே தீரும்.இவ்வாறு கே.எம்.அப்துல் றஸ்ஸாக் (ஜாவாத்) பேசினார்.
இம்மேடையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அன்று நீதி அமைச்சராகவும் இருந்த ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment