ஆங்கிலத்தில் புதிய வார்த்தையை உருவாக்கி

6 வயது சிறுவன் சாதனை

கனடாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஆங்கிலத்தில் கண்டுபிடித்துள்ள புதிய வார்த்தை விரைவில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளை திருப்பி எழுதும் போது வேறு வார்த்தை உருவாகினால் அதனை குறிப்பிட்டு சொல்வதற்கு வார்த்தை இல்லை. அதனை குறிப்பிடுவதற்கு 'லெவிடிரோம்' என்ற புதிய வார்த்தையை லெவி என்ற சிறுவன் உருவாக்கி உள்ளான்.
இந்த வார்த்தை ( stressed - desserts) போன்ற திருப்பி எழுதினாலும் அர்த்தம் தரக்கூடிய வார்த்தைகளை பொதுவாக குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும்.
'லெவிடிரோம்' என்ற வார்த்தை ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் இடம் பெற வேண்டும் என சிறுவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு ஆக்ஸ்போர்ட் இந்த வார்த்தை குறிப்பிட்ட காலத்திற்கு மக்கள் பயன்படுத்தினால் மட்டுமே அகராதியில் இடம் பெறும் என அறிவித்தனர்.

இந்த வார்த்தை இதுவரை அகராதியில் இடம்பெறவில்லை. சிறுவனின் கண்டுபிடிப்பிற்கு அனைவரும் வரவேற்பு அளித்துள்ளனர். மக்கள் பயன்படுத்தினால் மட்டுமே இந்த வார்த்தை அகராதியில் இடம்பெறும் என்ற நிலையில், பலர் அதற்கு உதவி வருகின்றனர். விரைவில் அந்த வார்த்தை அகராதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top