வாழ்த்துகின்றேன்
நாற்பத்து ஐந்து ஆண்டு
நானிலத்தில் நீ மலர்ந்து
நூற்கள் பல கற்று
நுன்பணியில் சிறப்புக்கண்டாய்
வெற்றிமேல் வெற்றி தானே
வேண்டு மட்டும் உன்தலைமை
பெற்றதனால் எமது மக்கள்
பெருமை கொண்டார் இந்த நாளில்!
நோயற்ற வாழ்வு வாழ்ந்து
நொடிப் பொழுதும் துன்பமின்றி
தாய்மார்கள் தந்தையரின்
தயவுமிகு பிராத்தனையால்
ஒயாது நீ் உழைத்து
உயர்த்தி விட்டாய் எம்மவரை
வாயாற வாழ்த்துகின்றேன்
வாழ்வாங்கு வதற்காய்
அல்லாஹ்வின் காவலுடன்
அன்பு மக்கள் துணைசேர்ந்து
பல்லோரும் வாழ்த்துரைக்க
பாரினிலே நீ சிறப்பாய்
எல்லோரும் போற்றுகின்றார்
இந்நாளில் இனிமைபெற
நல்லவனே உந்தனையே
நான் வாழ்த்தி விடைபெற்றேன்.
- அலிகான் ஷெரீப்
0 comments:
Post a Comment