உள்ளூராட்சி
மன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு:
கட்டுப்பணம்
செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்
சுயேட்சைகுழு
வேட்பாளர்கள் 5,000
ரூபாவையும்,
அரசியல் கட்சி
ஒன்றை சேர்ந்த வேட்பாளர்கள் 1,500
ரூபாவையும் செலுத்த வேண்டும்
93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்காக வேட்பு
மனுவை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பணம்
செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு
நீதிமன்றம் தடை விதித்துள்ளதன் அடிப்படையில் 203 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்கள்
தடைபட்டுள்ளன.
இந்த நிலையிலேயே 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள்
மாத்திரம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து உள்ளூராட்சி மன்றத்
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல்
14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்களை ஒப்படைக்க முடியும் என்று தேர்தல்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உடனடி தடையேதும் இல்லாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான
தேர்தலை நடத்துவது என கடந்த சனிக்கிழமை கூடிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது.
இதற்கமைவாக இன்றையதினம் வேட்புமனுக்களை பொறுப்பேற்பதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணி இன்றைய
தினத்திலிருந்து இடம்பெறும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டுப்பணத்தை டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை செலுத்தமுடியும்.
இது தொடர்பில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்
தெரிவிக்கையில்,
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தமது
கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும். அத்துடன், சுயேட்சைகுழு
வேட்பாளர்கள் 5,000 ரூபாவையும், அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்த வேட்பாளர்கள்
1,500 ரூபாவையும் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment