மக்கா, மதினா புனித பள்ளிவாசல்களில்
செல்பி, புகைப்படம், வீடியோ இனி எடுக்க முடியாது
சவூதி அதிகாரிகள் தெரிவிப்பு
சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களில் உள்ள இரண்டு பள்ளி வாசல்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அரசு தடை விதித்துள்ளது.
நாட்டின் மக்கா நகரில் உள்ள மஸ்ஜித் - அல் - ஹரம் (Great Mosque of Mecca) மற்றும் மதினா நகரில் உள்ள மஸ்ஜித் - அன் - நபாவி (The Prophet's Mosque) பள்ளிவாசல்களில் தான் தடை சட்டம் உடனடி அமுலுக்கு வந்துள்ளது.
அதன்படி செல்பி, புகைப்படம், வீடியோ போன்ற விடயங்களை இனி எடுக்கக்கூடாது.
ஏற்கனவே இந்த இரண்டு பள்ளிவாசல்களிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து வந்தனர். ஆனால் தற்போது இது அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.
அதையும் மீறி இதை செய்பவர்களின் கமெராக்கள் மற்றும் புகைப்படத்தை பறிமுதல் செய்யலாம் என பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்கு பிரார்த்தனை செய்ய வருபவர்கள் இந்த தடை உத்தரவால் தேவையில்லாத தொந்தரவிலிருந்து தடுக்கப்படுவார்கள் என சவூதி அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
/>
0 comments:
Post a Comment