நபர் ஒருவரைக் கடத்திய சம்பவம்

ஹிருணிகாவை தவிர 6 பேருக்கு கடூழிய சிறை



2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில், இளைஞன்ஒருவரை கடத்தி, தாக்குதல் நடத்தி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அறுவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில், விசாரிக்கப்பட்ட மேற்படி வழக்கின் தீர்ப்பு, நீதிபதி ஆர். குணசிங்ஹவினால் இன்று (24) வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தவிர அவருடைய மெய் பாதுகாவலர்களான எட்டுபேரில் ஆறுபேருக்கே, இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அறுபேருக்கும் 12 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எட்டாவது சந்தேகநபர் 18 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவன் என்பதனால், அவருக்கு கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இரண்டாவது சந்தேகநபர், அரச ஊழியர் என்பனால், அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top