கொழும்பு, கல்முனை, யாழ்ப்பாணம்,
மட்டக்களப்பு
உட்படமுக்கிய மாநகர சபைகள்,
வடக்கின் 4 மாவட்டங்களில் தேர்தல் இல்லை
எல்லை
நிர்ணயச் சர்ச்சை
மற்றும் சட்ட
ரீதியான தடைகளால்,
பிரதான மாநகர
சபைகளுக்கோ, வடக்கின் நான்கு மாவட்டங்களுக்கோ தேர்தல்
நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியான
தடைகளற்ற 93 உள்ளூராட்சி சபைகளுக்கு அடுத்தமாதம் வேட்புமனுக்கள்
ஏற்றுக் கொள்ளப்படும்
என்று தேர்தல்
ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த
உள்ளூராட்சி சபைகளுக்கு ஏற்கனவே கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளும்
பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த
நிலையில், வேட்புமனுக்
கோரப்பட்டுள்ள 93 உள்ளூராட்சி சபைகளுக்குள்,கல்முனை, கொழும்பு, யாழ்ப்பாணம்
உள்ளிட்ட முக்கியமான
மாநகரசபைகள் இடம்பெறவில்லை.
கொழும்பு,
கம்பஹா, கல்முனை, நீர்கொழும்பு,
கண்டி,காலி,
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருணாகல, அனுராதபுர மாநகரசபைகளுக்கு
வேட்புமனுக்கள் கோரப்படவில்லை.
அத்துடன்,
வடக்கிலுள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா
ஆகிய மாவட்டங்களில்
எந்தவொரு உள்ளூராட்சி
சபைகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
யாழ்ப்பாண
மாவட்டத்தில் சாவகச்சேரி நகரசபைக்கு மாத்திரம் வேட்புமனுக்கள்
கோரப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment