பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது
மீலாதுன் நபி
வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
இலங்கையில் பல்வேறு
சமூக, கலாசாரங்களைக்கொண்ட
மக்கள் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற
போதிலும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இது
சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக
விளங்குவதுடன்,
பன்மைத்துவ சூழலில்
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன விடுத்துள்ள மீலாதுன்
நபி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில்
அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது,
பண்டைய காலம் முதலே
எமது இந்த அழகிய
தேசம் பல்வேறு சமய,
கலாசார விழாக்களின்
ஊடாக தமது சகவாழ்வை
வெளிக்காட்டி வந்துள்ளது. அரச அனுசரணையுடன் நடைபெறும்
இந்த அனைத்து நிகழ்வுகளும் இலங்கை சமூகத்தில் பரஸ்பர
புரிந்துணர்வையும்
நல்லுறவையும்
உறுதிப்படுத்துகின்றன.
மூன்று
தசாப்தகால கொடிய
யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து
சமூகங்களும் ஒரு
தாய் மக்களைப் போல
ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும்
முன்மாதிரியான ஒரு தேசமாக சுபிட்சத்தை
நோக்கிச் செல்வதே எமது
எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது. உலகின் அனைத்து
சமயங்களும் போதிக்கும்
அன்பு, கருணை மற்றும் சகிப்புத்தன்மையை
வெளிப்படுத்தும் வகையில்
இவ்வருட தேசிய
மீலாத் விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறுதல் மிகச் சிறப்பானதாகும்.
இந்த
நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள தபால் சேவைகள்,
முஸ்லிம் சமய அலுவல்கள்
அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய,
கலாசார திணைக்களம்
என்பவற்றின் சேவையை பாராட்டுவதுடன், சகல
முஸ் லிம் மக்களுக்கும் மீலாதுன்
நபி விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment