ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை
கொரியக் குடியரசுக்கு விஜயம்
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொரியக்
குடியரசுக்கான உத்தியேபகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதியின்
கொரியக் குடியரசுக்கான
இந்த விஜயம் வியாழக்கிழமை
வரை இடம்பெறும்.
இலங்கைக்கும் கொரிய குடியரசிற்கும் இடையிலான
இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு
40 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு கொரிய ஜனாதிபதி
முன் ஜே
இன்னின்
அழைப்பிற்கு அமைய, இந்த
விஜயம் இடம்பெறுகிறது.
இரு
நாட்டுத் தலைவர்களுக்கும்
இடையிலான பேச்சுவார்த்தை
எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும்
இடையில் நல்லுறவை
மேம்படுத்துவற்காக தலைவர்கள் விரிவாக
பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த
விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான
பொருளாதார புரிந்துணர்வு,
பொருளாதார அபிவிருத்தி,
நிதியம் மற்றும்
கலாசார புரிந்துணர்வு
ஆகியன தொடர்பில்
சில உடன்படிக்கைகளும்
கைச்சாத்திடப்பட உள்ளன. முதலீடு மற்றும் தொழில்வாய்ப்பு
அனுமதிப்பத்திர முறைக்கான உடன்படிக்கைகளும்
கைச்சாத்திடப்பட உள்ளன.
0 comments:
Post a Comment