உலகின் வயதான பிரதமராக பொறுப்பேற்கும்
92 வயது நிரம்பிய மஹதீர் முஹம்மது
மலேசியாவில்
61 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி
மாற்றம் ஏற்பட்டுள்ளது.
92 வயது நிரம்பிய
முன்னாள் பிரதமர்
மஹதீர் முஹம்மது (Mahathir Mohamad
) பிரதமராக பதவியேற்க
உள்ளார்.
மலேசிய
பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல்
நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும்
பி.என்.கட்சிக்கும், முன்னாள்
தலைவர் மஹதீர்
முஹம்மது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும்
இடையே கடும்
போட்டி நிலவியது.
நேற்று வாக்குப்பதிவு
நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒன்றரை கோடி
மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர்.
இதையடுத்து,
நடைபெற்ற வாக்கு
எண்ணிக்கையில் ஆளும் பி.என். கட்சி
தலைமையிலான கூட்டணியை விட மஹதீர் முஹம்மது தலைமையிலான
எதிர்க்கட்சி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
222 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில்,
112 இடங்களில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று
ஆட்சியைக் கைப்பற்றியது.
சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளுக்கு பின்,
மலேசியாவில் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
92 வயது
நிரம்பிய மஹதீர்
முஹம்மது பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இதன்முலம் உலகிலேயே
மிகவும் வயதான
பிரதமர் என்ற
பெருமையை அவர்
பெற உள்ளார்.
தேர்தல்
முடிவுகள் வெளியானதையடுத்து
கருத்து தெரிவித்த
அவர், நாங்கள்
பழிவாங்க விரும்பவில்லை
என்றும், சட்டத்தின்
ஆட்சியை மீட்டெடுக்க
விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே
மஹதீர்
முஹம்மது இன்று பிரதராக
பதவியேற்க உள்ளதாக
தெரிவித்திருந்த நிலையில், பதவியேற்பு இன்று இல்லை
என மன்னரின்
அரண்மனை செய்தித்
தொடர்பாளர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment