இலங்கையில் இளைஞர்கள் மற்றும் தொழிற்துறையை
மேம்படுத்த முகப்புத்தகம் உதவி



இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் கலாநிதி றொசான் சமரஜீவவும் Dr. Rohan Samarajiva முகப்புத்தக பொதுக்கொள்கை பணிப்பாளர் இந்தியா தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பிராந்திய பணிப்பாளர் அங்கி டாஸ் Ankhi Das ஆகியோர் இலங்கையில் இளைஞர்கள் மற்றும் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
முகப்புத்தகத்துடன் ICTA நிறுவனம் இதன்கீழ் 10 ஆயிரம் வர்த்தகர்களுக்கு இவ்வருட இறுதிக்குள் உதவவுள்ளது.
முகப்புத்தகத்தின் Boost Your Business என்ற திட்டம் தற்பொழுது இலங்கையில் உள்ள இளைஞர் மற்றும் தொழில்முனைவோருக்கு நடைமுறையில் உண்டு. நாட்டிலுள்ள வளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள முகப்புத்தகம் தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் ஊடாக சுமார் 10 ஆயிரம் சிறியளவிலான வர்த்தகர்களை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் 2018 ஆம் ஆண்டுக்குள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழான முதற்கட்டம் யாழ்ப்பாணம், கொழும்பு, காலி ,கண்டி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. Boost Your Business என்ற தலைப்பிலான செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக நடமாடும் பொருளாதார சந்தை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ள நடுத்தர வர்த்தக பிரிவினருக்கு இதன்மூலம் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
முகப்புத்தகத்தின் ஒத்துழைப்புடன் நாட்டில் காத்திரமான மற்றும் விறுவிறுப்பான பொருளாதாரத்தை முன்னெடுப்பதே இதன் நோக்கம் என்று ICTA நிறுவனத்தின் தலைவர் கலாநிதி றொகான் சமரஜீவ தெரிவித்துள்ளார்.
  
முகப்புத்தகத்தின் இந்த திட்டத்தின் கீழ் 60 மில்லியன் வர்த்தகங்கள் உலகெங்கும் தொடர்புபட்டுள்ளன. இலவசமாக இதனை பயன்படுத்தவும் கையடக்கதொலைபேசியில் பயன்படுத்தவும் முடிகின்றது.
இந்த வசதிகளின் ஊடாக முகப்புத்தகத்தில் தமது வர்த்தகம் தொடர்பான விடயங்களை உள்ளடக்குவதற்கான பக்கத்தையும் எளிதில் ஆரம்பிக்க கூடிய வசதியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top