ஜனாதிபதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக
இன்று ஈரான் பயணமானார்
ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானியின் அழைப்பிற்கு அமைவாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று ஈரான் பயணமானார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை நேரப்படி இன்றிரவு 11.30ற்கு ஈரானின் தலைநகர் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தை சென்றடையவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஈரான் ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. இலங்கை பொருளாதாரம் மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கையில் ஈரான் முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது விசேட கவனம் செலுத்தவுள்ளார்.
0 comments:
Post a Comment