எரிபொருள்
நிரப்பு நிலையங்களில நீண்ட வரிசை
எரிபொருளுக்கான
விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து,நாட்டின் சில
பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள்
நிரப்பு நிலையங்களுக்கு
முன்னால், நீண்ட
வரிசை காணப்படுவதால்
இந்த நிலை
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
இலங்கை பெற்றோலிய
கூட்டுதாபனத்தின எரிபொருளுக்கான விலை அதிகரிப்புக்கு அமைய
லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருளின்
விலையை அதிகரித்துள்ளதாக
அறிவித்துள்ளது.
எரிபொருளுக்கான விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பெற்றோல் 20 ரூபாவினாலும், டீசல் 9 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 40 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டைன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 137 ரூபாயாகவும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 148 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஓட்டோ டீசல் லீற்றரொன்று 109 ரூபாயாகவும் சுப்பர் டீசல் லீற்றரொன்று 119 ரூபாயாகவும் அதிகரிக்கபபட்டுள்ளது.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 101 ரூபாய் ஆகும்.
.
0 comments:
Post a Comment