அரச மரக்கூட்டுத்தாபன புதிய தலைவர் பதவி இரத்து
அரச மரக்கூட்டுதாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்த அநுருத்த பொல்கம்பலவின் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரத்து செய்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி அநுருத்த பொல்கம்பல மரக்கூட்டுதாபனத்தின் புதிய தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
அநுருத்த பொல்கம்பொலவின் நியமனம் தொடர்பாக, பகிரங்கமான விமர்சனங்கள் பல முன்வைக்கப்பட்ட பின்னணியிலேயே, இம்முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார் எனத் தெரிகிறது.
அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த பி. திஸாநாயக்க, 20 மில்லியன் ரூபாய் இலஞ்சத்தைப் பெற்றதாகக் கூறப்படும் சந்தர்ப்பத்தில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால், அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார். அதன் பின்னரே, பொல்கம்பொலவின் நியமனம் இடம்பெற்றிருந்தது.
0 comments:
Post a Comment