அமைச்சுப்
பதவியிலிருந்து பொன்சேகாவை நீக்குமாறு
சிறி
லங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதியிடம்
கோரிக்கை
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு
வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியிலிருந்து அவரை நீக்குமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில்
கலந்துகொண்டிருந்த அமைச்சர் சரத் பொன்சேகா, ஜனாதிபதியை விமர்சித்தமையே இதற்குக் காரணமெனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, இந்த விடயம் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்
மலிக் சமரவிக்கிரமவிடம் தெரிவித்துள்ளார். இதற்கு, மலிக் சமரவிக்கிரம கவலை தெரிவித்துள்ளார் எனத்
தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, அமைச்சர் சரத் பொன்சேகாவை, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு
கோரியுள்ளார்.
0 comments:
Post a Comment