ஏ.எம்.ஜெமீல் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின்
தலைவர் பதவியிலிருந்து விலகுகின்றார்.
அமைச்சர் ரிஷாத்திடம் கடிதம் கையளிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான  கலாநிதி ஏ.எம்.ஜெமீல் சிறிலங்கா அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து இராஜிணாமாச் செய்யவுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து ஏ.எம்.ஜெமீல் தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு கடிதம் வழங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஏ.எம்.ஜெமீல் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும் தொடர்ந்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவராக இருந்து கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக செயற்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது .
ஏ.எம்.ஜெமீல் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை கடந்த 2015 ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றிருந்தார்.
சர்வதேச ரீதியான பதவியினை பெற்று இவர் அமெரிக்கா செல்லவிருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.
.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top