கைது செய்யப்பட்ட உயர் அதிகாரிகளை
பணியில் இருந்து இடைநிறுத்த உத்தரவு



இந்திய வணிகரிடம் 20 மில்லியன் ரூபா இலஞ்சப் பணம் பெற்றுக் கொண்ட போது கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட, இரண்டு சிரேஸ்ட அரச அதிகாரிகளையும், உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோர் இந்திய வணிகர் ஒருவரிடம் 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற போது நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இவர்கள் இருவரையும் உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுதந்திரமாகச் செயற்படுகிறது என்பதை இந்தக் கைது உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரி மகாநாம, ஜனாதிபதியின் செயலாளருக்கு அடுத்த நிலையில் அதிகரம் மிக்க அதிகாரியாவார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவரும் வேறு அரச நிறுவனமொன்றின் தலைவரும் இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:
ஜனாதிபதி அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவரும் வேறு அரச நிறுவனமொன்றின் தலைவரும் இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
   
இச்சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள ஜனாதிபதி குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித அழுத்தங்களுமின்றி சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளர். ஊழல் மோசடிக்க்கு எதிரான அரசாங்கத்தின் தீர்க்கமான கொள்கையினை நடைமுறைப்படுத்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் இதனூடாக உறுதியாகின்றது. சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பினை வகிக்கும் அரச அதிகாரிகளுக்கு தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனமானஇ பக்கச்சார்பற்ற பின்னணி தொடர்பாக தாம் மகிழ்சியடைவதாக கெளரவ ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

03.05.2018

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top