முன்னாள் மாகாணக் கல்விப்பணிப்பாளர்
எம்.பி.எச். மொஹமட்  காலமானார்
***************************************



கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய எம்.பி.எச். மொஹமட்  இன்று 11 ஆம் திகதி அதிகாலை காலமானார்.
சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக்  கொண்ட இவர் அம்பாறை மாவட்ட கல்விப் பணிப்பாளராகவும் பின் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர்.
கல்முனை பிரதேச சமூகசார் அமைப்புகளில் ஆலோசகராக இருந்ததுடன், கல்முனை மற்றும் அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றங்களின் நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றியவராவார்.
கல்முனை 9 பள்ளி வீதியில் வசித்து வந்த இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை கல்முனையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top