கைது செய்யப்பட்ட
ஜனாதிபதியின் முன். பிரதானி,
முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு
விளக்கமறியல் நீடிப்பு
கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த
இருவரும் ரூபா
2 கோடி இலஞ்சம்
பெற்ற குற்றச்சாட்டு
தொடர்பில், கடந்த மே 03 ஆம் திகதி
கைது செய்யப்பட்டு
இன்று (09) வரை விளக்கறியலில் வைக்கப்பட்டனர்.
கொழும்பு
பிரதான நீதவான்
லால் ரணசிங்க
பண்டார முன்னிலையில்
இன்று (09) அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து,
அவர்களுக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கந்தளாய்
சீனி தொழிற்சாலைக்குச்
சொந்தமான பங்குகளை,
இந்திய நிறுவனம்
ஒன்றிற்கு வழங்குவது
தொடர்பில் அந்நிறுவனத்திடமிருந்து
ரூபா 54 கோடி
இலஞ்சம் கோரியதாகவும்,
அதற்கான முற்பணமான
ரூபா 2 கோடியை
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து
பெற்றுக் கொள்ள
முற்பட்ட வேளையில்
கைது செய்யப்பட்டனர்.
குறித்த
நபர்களை, இலஞ்ச
ஊழல் ஆணைக்குழு
அதிகாரிகள் கடந்த மே 03 ஆம் திகதி,
குறித்த ஹோட்டலின்
வாகன தரிப்பிடத்தில்
வைத்து கைது
செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment