ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்
குழந்தைகள், பெண்கள் உட்பட 13 பேர் பலி
ஆப்கானிஸ்தானில்
இன்று அடுத்தடுத்து
பயங்கரவாத தக்குதல்
நடைபெற்றுள்ளது, காபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில்
குழந்தைகள், பெண்கள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர்
25 பேர் படுகாயம்
அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான்
நாட்டில் அந்நாட்டின்
அரசுக்கும், அங்கு செயல்பட்டு வரும் பயங்கரவாத
அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து
வருகிறது. இதுவரை
ஏராளமான பொதுமக்களும்,
பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்,
தலைநகர் காபுலில்
உள்ள கிராமப்புற
மறுவாழ்வு மற்றும்
மேம்பட்டு அமைச்சகத்தின்
நுழைவு வாயில்
அருகே இன்று
தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பெண்கள்
மற்றும் குழந்தைகள்
உட்பட 13 பேர்
பரிதாபமாக பலியாகினர்.
மேலும், 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கிராமப்புற
மறுவாழ்வு மற்றும்
மேம்பட்டு அமைச்சகத்தின்
அருகே இன்று
நடைபெற்ற இந்த
கோர தாக்குதலுக்கு
ஐ.எஸ்
பயங்கரவாத அமைப்பினர்
பொறுப்பேற்றுள்ளனர். இன்று ஒரு
நாளில் மட்டும்
ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுள்ள இரண்டாவது பயங்கரவாத தாக்குதல்
இதுவாகும்.
அந்நாட்டின்,
ஜலாலாபாத் பகுதியில்
உள்ள கல்வித்துறை
கட்டிடத்தின் அருகே இன்று காலை பயங்கரவாதிகள்
துப்பாக்கி சூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment