கோத்தாபய ராஜபக்ஸவின்
வழக்கை விசாரிப்பதில் இருந்து
4 நீதியரசர்கள் விலகினர்
முன்னாள்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய
ராஜபக்ஸவின்
அடிப்படை உரிமை
மீறல் வழக்கை
விசாரிக்கும் குழுவில்
இருந்து இதுவரை
நான்கு நீதியரசர்கள்
விலகியுள்ளனர்.
நிதிக்
குற்றப் புலனாய்வுப்
பிரிவினரால், காரணமின்றித் தாம் கைது செய்யப்படக்
கூடும் என்று
உச்சநீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ஸ அடிப்படை உரிமை
மீறல் மனுவைத்
தாக்கல் செய்திருந்தார்.
மிக் விமானக்
கொள்வனவு மற்றும்
சில விவகாரங்கள்
தொடர்பாக, தமக்கு
எதிராக காரணமின்றி
குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த
வழக்கை விசாரணை
செய்வதில் இருந்து
முதலில் ஒரு
நீதியரசரும், அதையடுத்து இரண்டு நீதியரசர்களும், நேற்று
மற்றொரு நீதியரசரும்
விலகிக் கொண்டனர்.
இதுவரையில்
நீதியரசர்கள் ஈவா வணசுந்தர, புவனேக அலுவிகார,
பிரியந்த ஜயவர்த்தன,
முர்து பெர்னான்டோ
ஆகியோரே, இந்த
வழக்கை விசாரிப்பதில்
இருந்து தனிப்பட்ட
காரணங்களுக்காக விலகிக் கொண்டுள்ளனர்.
இந்த
வழக்கில் கோத்தாபய
ராஜபக்ஸவை கைது செய்வதற்கு
ஏற்கனவே இடைக்கால
தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு வாதங்களுக்காக
திகதி குறிக்கப்பட்ட
நிலையிலேயே, நீதியரசர்கள் அடுத்தடுத்து விலகியுள்ளனர்.
0 comments:
Post a Comment