இந்துக் கலாசார அலுவல்கள்
பிரதி அமைச்சராக, காதர் மஸ்தான்!
இந்துக்களை நிந்தனை செய்யும் செயல்!!
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு
இந்துக்
கலாசார அலுவல்கள்
பிரதி அமைச்சராக,
நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமை
இந்துக்களை நிந்தனை செய்யும் செயல் எனத் நாடாளுமன்ற உறுப்பினர்
வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
“இது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும்”அவர் கூறியுள்ளார்.
சிறிகொத்தாவில்
நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து
கருத்துரைத்த அவர், “காதர் மஸ்தானுக்கு, பிரதியமைச்சர்
பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், இந்துக் கலாசார
அலுவல்களும் உள்ளது. பிரதியமைச்சரின்றி,
நீண்டகாலம் வெற்றிடமாக இருந்த அமைச்சுகளில் ஒன்று
என்ற வகையில்
அந்த வெற்றிடத்தை
நிரப்பும் வகையிலேயே, இந்நியமனம்
வழங்கப்பட்டுள்ளது”
“எனினும்,
இது, கோழியைப்
பிடித்து கீரியிடம்
கொடுக்கும் செயலாகவே அமைந்துள்ளது. தலைமைத்துவங்களால் எடுக்கப்படும் தீர்மானம் என்றாலும் இது
இந்துக்களை நிந்திக்கும் செயலாகும்”
“எனவே,
இது குறித்து
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன மீள்
ஆய்வு செய்வாராயின்
சிறந்ததாகும். இல்லாவிட்டால் பிரதியமைச்சரும்
மக்களும் நெருக்கடிக்கு
உள்ளாகுவர்” என்று
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment