மேல்மாகாண பாடசாலைகளுக்கான
ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு
ஜனாதிபதி தலைமையில் நாளை



மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 496 பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் நாளைய தினம் (7) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
கொழும்பு நெலும்பொக்கன என்ற தாமரைத்தடாகத்தில் நாளை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் காலை 8.30 க்கு சமூமளிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் தொடர்பான ஆவணங்கள் கடந்த மாதம் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற நேர்முகப்பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் தொலைபேசியினுடாக அழைப்புவிடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மேல்மாகாண மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவில் ஆவணங்கள் வழங்கப்பட்டன. நேர்முகப்பரீட்சைக்கு தமிழ்மொழியில் 118 பேர் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையிலேயே இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞானம் வர்த்தகம் , தகவல்தொழில்நுட்பம் , நடனம் ,இசை மற்றும் ஆரம்ப வகுப்புகளுக்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த நியமனங்கள் இடம்பெற்றுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top