கல்வித்துறையில் அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன்
போட்டி போடக்கூடிய ஒரு நிலையை உருவாக்க வேண்டும்
அமைச்சர் றிசாட் பதியுதீன்

நல்லாட்சி அரசாங்கம் இலங்கையின் கல்வித்துறையை மேம்படுத்தி உலக நாடுகளுடன் நாம் போட்டிபோடக்கூடியவாறான பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
பல்கலைக்கழகம் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத மாணவர்களின் அறிவுத் தாகத்தை தீர்த்து வைத்து அவர்களை கல்விச்சமூக அந்தஸ்துக்குக் கொண்டுவர தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் துணைபுரிகின்றது.
வளர்முக நாடுகளிலே இலங்கையானது கல்வித்துறையில் ஒப்பீட்டளவில் உயர்ந்த அடைவைக்கொண்டிருந்தாலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் நாம் போட்டி போடக்கூடிய ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.
நமது நாட்டில் கல்வியியலாளர்களையும் புத்திஜீவிகளையும் அதிகரிப்பதற்கு இவ்வாறான கல்லூரிகள் மிகவும் காத்திரமாக பங்களிப்பை வழங்குகின்றன. கல்வித்துறையில் மேம்பாடடைந்தால் நாம் பொருளாதாரதுறையிலும் சிறப்பான வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய பட்டமளிப்பு விழாவில் பட்டம்பெறும் மாணவர்கள் தமது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தையும் புதிய பயணத்தையும் தொடங்குகின்றனர் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
  
கல்லூரியின் தலைவர் இல்ஹாம் மரைக்கார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாநிதி மரைக்கார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைர்தீன், மாகாணசபை உறுப்பினர் பாயிஸ், உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top