எதிர்வரும்
05ஆம் திகதி
பிரேரணை கொண்டு வரக் கோரினார் மைத்திரி
புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்றும் தெரிவிப்பு
புதிய
பிரதமரை நியமிக்குமாறு
எதிர்வரும் 05ஆம் திகதி நாடாளுமன்றத்தில்
பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால், புதிய
பிரதமரை நியமிக்கத்
தயார் என்று,
சிறிலங்கா ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்
சந்தித்த போதே
அவர் இதனைத்
தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் தலைமையில்,
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
13 பேர் இந்தக்
கூட்டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
இந்தக் கூட்டத்தில்
பங்கேற்கவில்லை.
சுமார்
ஒரு மணிநேரம்
நீடித்த இந்தச்
சந்திப்பின் பின்னர், தகவல் வெளியிட்ட கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
“ தற்போது பிரதமராகச்
செயற்படும், மஹிந்த ராஜபக்ஸவுக்கு பெரும்பான்மை பலம்
இல்லை என்பதை
ஜனாதிபதி ஏற்றுக்
கொண்டுள்ளார்.
இந்த
நிலையில், மஹிந்த
ராஜபக்ஸவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்றும்,
புதியதொரு பிரதமரை
நியமிக்குமாறும், நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 05ஆம்
திகதி பிரேரணையைக் கொண்டு வந்து
நிறைவேற்றுமாறும், அதற்கமைய புதிய
பிரதமரை நியமிக்கத்
தயாராக இருப்பதாகவும்
தெரிவித்தார்.” என்று கூறினார்.
இதேவேளை,
நாடாளுமன்றத்தில் புதிய பிரதமராக ரணில்
விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு கோரினால் அதனைத் தான்
ஏற்கப் போவதில்லை
என்றும் ஜனாதிபதி
கூறியதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கடந்த
மூன்று ஆண்டுகளில்
ரணில் விக்கிரமசிங்கவுடன்
இணைந்து செயற்பட
முடியாத நிலை
காரணமாகவே அவரை
நீக்கியதாகவும், எனவே அவரை மீண்டும் நியமிக்க
முடியாது என்றும்
அவர் கூறியிருக்கிறார்.
அதற்கு,
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினர், எதிர்ப்பு வெளியிட்டதாகவும்
கூறப்படுகிறது.
மஹிந்த
ராஜபக்ஸவுக்கு எதிராக எதிர்வரும் 5ஆம் திகதி,
புதிதாக நம்பிக்கையில்லா
பிரேரணையைக் கொண்டு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன நேற்றைய
சந்திப்பின் போது, கூறியதாக சந்திப்புக்குப் பின்னர்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்
சிவமோகன் கூறியிருந்தார்.
எனினும்,
இதனை நிராகரித்த
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
“இது
புதிய நம்பிக்கையில்லா
பிரேரணை அல்ல.
சபையில் நிறைவேற்றப்பட்ட
நம்பிக்கையில்லா பிரேரணைகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு
ஜனாதிபதியைக் கோரும் வகையில், ஏற்கனவே நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையே எதிர்வரும் 5ஆம் திகதி வாக்கெடுப்புக்கு
விடப்படும்” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
0 comments:
Post a Comment