மேலும் பாரிய வீழ்ச்சியில் இலங்கை ரூபா
182 ரூபாவை தாண்டியது டொலரின் பெறுமதி



இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மிக மோசமான பெறுமதியை இலங்கை ரூபாய் இன்று எட்டியுள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்திற்கு அமைய டொலர் ஒன்றின் விலை 182 ரூபாவைக் கடந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய இன்று 182.2733 ரூபாயை எட்டியுள்ளது. அதற்கமைய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை178.3257 ரூபாயை எட்டியுள்ளது.

இலங்கையில் அரசியல் நெருக்கடி தீவிரம் அடைந்துள்ள நிலையில், ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.

இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவுகளை சந்திக்கும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


நாணயம்
கொள்வனவு விலை (ரூபா)
விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்
127.7270
133.1728
கனடா டொலர்
133.1851
138.1766
சீன யுவான்
25.3424
26.5615
யூரோ
200.0696
207.2074
ஜப்பான் யென்
1.5572
1.6149
சிங்கப்பூர் டொலர்
128.8034
133.2359
ஸ்ரேலிங் பவுண்
226.1134
233.5315
சுவிஸ் பிராங்க்
177.1844
183.9001
அமெரிக்க டொலர்
178.3257
182.2733

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top