நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான
வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியாலேயே
மீளப் பெற்றுக் கொள்ள முடியாதாம்
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிக்கின்றார்
நாடாளுமன்றத்தை
கலைப்பது தொடர்பில்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அவராலேயே
மீளப் பெற்றுக்
கொள்ள முடியாது
என முன்னாள்
பிரதம நீதியரசர்
சரத் என்
சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில்
நாடாளுமன்றை கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன வர்த்தமானி
அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த
வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக் கொள்ளவோ
அல்லது ரத்து
செய்யவோ ஜனாதிபதிக்கே
சட்ட ரீதியான
அதிகாரம் கிடையாது
என சரத்
என் சில்வா
குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்
அமைப்பிற்கு அமைவாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட
சர்வதேச நியமங்களுக்கு
அமையவும் நாடாளுமன்றை
கலைத்த வர்த்தமானி
அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியாது என
அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும்
பின்பற்றப்படும் லத்தின் சட்டக்கோட்பாடுகளின்
ஒன்றான பென்டுக்ஸ்
ஒபிசீயா என்னும்
கோட்பாட்டின் அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தலை ரத்து
செய்ய முடியாது
என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்ச
நீதிமன்றில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்
போது மட்டுமே
இந்த சட்டப்
பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என
அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
சட்ட
மா அதிபரும்
ஏனைய தரப்பு
சட்டத்தரணிகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்
கொண்டு உச்ச
நீதிமன்றில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண
முடியும் என
சரத் என்
சில்வா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment