மூன்றில் இரண்டு
பெரும்பான்மைப் பலத்துடன்
அரசாங்கம் அமைப்போம்
- கண்டியில் அகிலவிராஜ்
காரியவசம்
ஒவ்வொரு
நாளும் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறிக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம்
பின்னடைவையே சந்தித்துக் கொண்டிருக்கின்றது எனவும், நாளுக்கு நாள் ஐக்கிய தேசிய முன்னணிக்குள்ள செல்வாக்கு அதிகரித்துக்
கொண்டே செல்வதாகவும் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கண்டியில்
இன்று (24) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு
உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
பாராளுமன்றத்தில்
பெரும்பான்மையைப் பெற்றுள்ள எமது தரப்புக்கு 122 பேரின் ஆதரவு உள்ளதாகவும்,
இது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்
கூறிய அவர், தாம் அரசாங்கமொன்றை அமைக்கும் போது
மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் அதனைச் சாதிக்க முடியுமாக இருக்கும் எனவும்
சுட்டிக்காட்டினார்.
ஹெல உறுமய
பாட்டளி சம்பிக்க எம்.பி உரை நிகழ்த்துகையில்,
சட்ட
ரீதியான அரசாங்கம் ஒன்றின் கீழ் நடைபெறும் தேர்தல் ஒன்றை முடியுமானால் நடாத்திக்
காட்டுங்கள்
பிரதமர்
பதவியை பறித்தெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால, சபாநாயகர் பதவியையும் பறிப்பதற்கு முயற்சி எடுத்தார்.
பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு சுதந்திரமாக வாக்கெடுப்பொன்றை நடாத்த
வாய்ப்பளிக்காத மைத்திரிபால சிறிசேன, பொது
மக்களுக்கு சுதந்திரமான தேர்தல் ஒன்றை வழங்குவாரா? எனவும் சம்பிக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.
முன்னாள்
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன எம்.பி
உரை நிகழ்த்துகையில்,
புதிய
அரசாங்கத்துக்கு எதிராக பிராந்திய ரீதியாக நடைபெறும் கூட்டங்கள் மூலம் மக்களை
அறிவுறுத்தி கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் வீட்டையும் முற்றுகையிட்டு மக்கள் சக்தியை நாம் காட்டுவோம்.
இன்னும்
ஒரு சில நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் தான் உள்ளன. மீண்டும் ஜனநாயகத்தைப்
பாதுகாத்தோம் என்ற செய்தியுடனே நாம் கண்டிக்கு வருவோம் எனவும் அவர் மேலும்
குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment