இலங்கையில் அமெரிக்க டொலரின்
மதிப்பு
ரூ. 180 ஆனது
அமெரிக்க
டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி இன்று வரலாற்றில் முன்னெப்போதும்
இல்லாதளவுக்கு வீழ்ச்சியைச்
சந்தித்துள்ளது.
இலங்கை
மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று
விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, ரூபா 180.6606 ஆக
வரையறுக்கப்பட்டுள்ளது.
கடந்த
மாதம் 22 ஆம் திகதி அமெரிக்க டொலரின் பெறுமதி ரூபா 173.38ஆக இருந்தது. இன்று இலங்கை ரூபாவின் மதிப்பு, மேலும், ரூபா 7.28
ஈனால் குறைவடைந்துள்ளது.
தொடர்ந்து
வீழ்ச்சியடைந்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதியை வலுப்படுத்தும் நோக்கில்
இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், அது பலனளிக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
First time in the history, Sri Lankan Rupee hits Rs 180 against US$ as
currencies across the world continues to fall in value
0 comments:
Post a Comment