2018.11.27ஆம் திகதியன்று நடைபெற்ற
அமைச்சரவை கூட்டத்தின் போது
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
01. சிறு நீரக நோயை கட்டுப்படுத்துவதற்கான
திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
- (நிகழ்ச்சி நிரலில் 05ஆவது விடயம்)
சிறு
நீரக நோயினால்
பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு மிகவும்
வசதியுடன் கூடிய
மருத்துவ மற்றும்
சிகிச்சை சேவையை
வழங்குவதை இலக்காகக்கொண்டு
கண்டி பெரியாஸ்பத்திரியுடன்
இணைந்ததாகவும் அனுராதபுரம் மெத்சிரி செவன சிறுநீரக
நோயாளர் நிவாரண
சிகிச்சை மற்றும்
இரத்த சுத்திகரிப்பு
மத்திய நிலையம்
மற்றும் கிராந்துரு
கோட்டே சிறுநீரக
நோய் தொடர்பான
சமூக நல
பொருளாதார ஊக்குவிப்பு
கல்வி மற்றும்
தகவல் கேந்திர்
நிலையத்தை நிறுவவதற்காக
அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாராம் வழங்கப்பட்டது.
இதற்கான திட்டத்தை
2019 ஆம் ஆண்டிலிருந்து
நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வைத்திய
உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கும்
ஏனைய வசதிகளை
செய்துகொடுப்பதற்கும் சிறுநீரக நோய்
நிவாரணத்திற்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டுள்ள களனி பல்கலைக்கழகத்துடன் இணைந்த சிறு நீரகநோய் தொடர்பான
தகவல் மற்றும்
ஆய்வு மத்திய
நிலையமொன்றை அமைத்தல் கண்டி ஆதார வைத்தியசாலை
மற்றும் சிங்கப்பூர்
Molecular and Cell Biology நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படும்
ஆய்வுத்திட்டம் மற்றும் தேசிய வைத்திய சிகிச்சை
முறையைப்பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுத்திட்டம்
மற்றும் சிகிச்சை
மேம்பாட்டுத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு
செய்யப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி
மைத்திரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
02. கந்தகடுவ மற்றும் திரிகோணமடுவ விவசாய
பண்ணைக்குச் சொந்தமான நிலத்தை விவசாய அபிவிருத்தி
பணிகளுக்காக இலங்கை மகாவலி அதிகார சபைக்கு
மீண்டும் சுவீகரித்தல்
(நிகழ்ச்சி நிரலில் 8ஆவது விடயம்)
பொலன்னறுவை
மாவட்டத்தில் அமைந்துள்ள கன்தகடுவ மற்றும் திரிகோணமடுவ
முதலான அரசாங்கத்தின்
விவசாய பண்ணைகளுக்கு
உட்பட்ட காணியை
எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்
கீழ் விவசாய
ரீதியில் அபிவிருத்தி
செய்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைவாக இதுவரையில் அபிவிருத்தி செய்யப்படாத கந்தகடுவ
மற்றும் திரிகோணமடுவ
விவசாய பண்ணைகளுக்கு
சொந்தமான 3415 ஹெக்டர் நிலத்தை விவசாய மற்றும்
கால்நடையுடன் தொடர்புபட்ட விவசாய திட்டமாக துரிதமாக
அபிவிருத்தி செய்யக்கூடிய வகையில் இலங்கை மாவலி
அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்படுத்தப்படவுள்ளது. இதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும்
சுற்றாடல் துறை
அமைச்சர் என்ற
வகையில் ஜனாதிபதி
மைத்திரிபா சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
03. 2018ஆம் ஆண்டில் பொருளாதாரம் தொடர்பான
மதிப்பீடு (நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)
தற்பொழுது
நாட்டின் பொருளாதார
நிலைமை தற்பொழுதுள்ள
செலுத்தப்படாத உண்டியல் மற்றும் உடன்பட்ட கடப்பாட்டு
நிலைமை மற்றும்
நாட்டின் பொருளாதார
நிலையை மேம்படுத்தவதற்காக
சமீபத்தில் கடைபிடிக்கப்பட்ட வேலைத்திட்டம்
தொடர்பாக நிதி
மற்றம் பொருளாதார
அலுவல்கள் அமைச்சர்
என்ற ரீதியல்
பிரதமர் மஹிந்த
ராஜபக்ஸ சமர்ப்பித்த விடயங்களை அமைச்சரவை
கவனத்தில் கொண்டுள்ளது.
04. சபரிமலை ஐயப்பன் புனித ஸ்தலத்திற்கு
யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு
வசதிகளை செய்து
கொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 24ஆவது விடயம்)
இந்தியாவில்
கேரள மாநிலத்தில்
அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் புனித தலத்திற்கு
இலங்கை இந்து
பக்தர்கள் டிசம்பர்
மாதம் இறுதியிலும்
ஜனவரி மாதத்தின்
ஆரம்பத்திலும் வருடம் முழுவதும் யாத்திரையில் ஈடுபடுகின்றனர்
.இந்த புண்ணிய
தலத்திற்கு யாத்திரை மேற்கொள்வதற்காக செல்லும் பக்தர்களுக்கு
வசதிகளை செய்து
கொடுக்கும் பொருட்டு இந்தியாவிலுள்ள இலங்கை உயர்
ஸ்தானிகர் அலுவலகத்தில்
தற்காலிகமாக பீடமொன்றை அமைத்தல் உள்ளிட்ட ஏனைய
தேவையான வசதிகளை
செய்வதற்காக மீள்குடியமர்வு புனர்வாழ்வு
வடக்கு அபிவிருத்தி
மற்றும் இந்துமத
அலுவல்கள் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05.ஆள்
கடத்தல் வியாபார
(Human trafficking) தடுப்பு முறை தொடர்பாக
புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 27ஆவது
விடயம்)
இலங்கையில்
ஆள் கடத்தல்
வியாபாரத்தை (Human trafficking) தடுப்பது தொடர்பில்
தேசியசெயற்பாட்டு சிறப்பு பணிக்குழு ஒன்று 2010ஆம்
ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளதுடன்
அந்த பணிக்குழுவினால்
ஆள் கடத்து
வியாபாரத்தை இல்லாது தொழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டடிருந்தன. இதற்கமைவாக ஆள்
கடத்தல் வியாபாரத்தையை
தடுப்பதற்காக சமூக கட்டுப்பாட்டு பொலிஸ் அதிகாரிகளை
கேந்திரமாகக் கொண்டு பயிற்சி வேலைத்திட்டம் ஒன்று
நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக
அரச நிர்வாகம்
உள்நாட்டலுவல்கள் மற்றும்; நீதி அமைச்சு 'LIFE' அமைப்பு
மற்றும் இலங்கையின்
பிரிடிஷ் உயர்ஸ்தானிகர்
அலுவலகத்திற்கிடையில் முத்தரப்பு உடன்படிக்கை
ஒன்றை எட்டுவதற்காக
அரச நிர்வாகம்
உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதி அமைச்சர் சுசில்
பிரேமஜயந்த சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
06. தேசிய வர்த்தக கொள்கையொன்றை வகுத்தல்
(நிகழ்ச்சி நிரலில் 28ஆவது விடயம்)
இலங்கைக்காக
தேசிய வர்த்தக
கொள்கையொன்றை தயாரிப்பதற்கு தகுதியைக்கொண்ட
அரச மற்றும்
தனியார் துறையைச்
சேர்ந்த புத்திஜீவிகள்
குழுவொன்றை நியமிப்பதற்காக சர்வதேச வரத்தகம் மற்றும்
முதலீட்டு மேம்பாட்டு
அமைச்சர் கலாநிதி
பந்துல குணவர்தன
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வருமான
நிர்வாகம் மற்றும்
முகாமைத்துவ தகவல் கட்டமைப்பு (நிகழ்ச்சி நிரலில்
30ஆவது விடயம்)
உள்நாட்டு
இறைவரித்திணைக்களம் நடைமுறைப்படுத்தும் வருமான நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ
தகவல் கட்டமைப்பு
2017ஆம் ஆண்டு
இல 24ற்கு
கீழான புதிய
தேசிய வருமான
சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன்
சில வரி
வகைகளுக்கு அமைவாக மீண்டும் மறுசீரமைப்பதற்கு வேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக மென்பொருள்
மறுசீரமைப்புக்கான பணியின் ஆரம்ப
ஒப்பந்தத்தை நிறுவனத்தின் மூலம் நிறைவேற்றிக்கொள்வதற்காக நிதி மற்றும்
பொருளாதார அமைச்சர்
என்ற ரீதியில்
பிரதமர் மஹிந்த
ராஜபக்ஸ சமர்ப்பித்த
பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. மாத்தறை பெலிஅத்த ரயில் பாதையில்
ஒரு நிரலில்
அமைந்துள்ள வீடுகளுக்கமைவாக பாதையை அமைத்தல் (நிகழ்ச்சி
நிரலில் 32வது
விடயம்)
மாத்தறை
பெலிஅத்த ரயில்
பாதை திட்டத்தின்
நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. அத்தோடு
2019ஆம் ஆண்டு
தொடக்கம் கொழும்பிலிருந்து
பெலிஅத்த வரையில்
முடுமையான கரையோர
ரயில் பாதையை
உள்ளடக்கிய வகையில் ரயில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு
எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மாத்தறை பெலிஅத்த
ரயில் பாதையில்
ஒரு பக்கத்தில்;
இந்த மக்கள்
வாழும் வீடுகள்
இருப்பதுடன் அவற்றுக்கு வசதிகளை வழங்குவதன் தேவையை
கவனத்தில் கொண்டு
ரயில் பாதைக்கு
அருகாமையில் வீதியை நிர்மாணிப்பதற்கான தேவை அடையாளங்
காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக மொத்த தூரமான 12.95 கிலோ
மீட்டரைக்கொண்ட 54 ஆவது வீதியை
நிர்மாணிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
கண்காணிப்பின் கீழ் அதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக
போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல்
சிறிபால டி
சில்வா சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 150 மெகா வோல்ட் சூரிய மின்
உற்பத்தி நிலையம்
மற்றும் 60 மெகாவோல்ட் காற்று மூலமான மின்உற்பத்தி
நிலையத்தை நிர்மாணிப்பதற்கான
கொள்கை கட்டமைப்புக்கான
பெறுகை நடவடிக்கைகளை
மேற்கொள்ளுதல். (நிகழ்ச்சி நிரலில் 33ஆவது விடயம்)
இலங்கையின்
மின்சாரம் தொடர்பான
தெரிவுசெய்யப்பட்ட திட்டத்திற்கு அமைவாக
சம்பிரதாயம் அல்லாத மாற்று புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் 2030ஆம் ஆண்டளவில்
நாட்டின் மொத்த
மின்சார தேவையில்
மூன்றில் ஒன்றை
பூர்த்தி செய்து
கொள்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக
மின்சார சபையினால்
தயாரிக்கப்பட்டடுள்ள 2018 -2037 நீண்டகால திட்டத்தின்
கீழ் 2020ஆம்
ஆண்டளவில் தேசிய
மின்சார கட்டமைப்புடன்
தொடர்புபடுத்த வேண்டிய 60 மெகா வோல்ட் காற்று
மூலமான மின்
உற்பத்தி மற்றும்
150 மெகா வோல்ட்
சூரிய சக்தி
மின் உற்பத்தி
நிலையத்தை அமைப்பதற்கான
கொள்கை கட்டமைப்புக்கு
அiவாக
பெறுகை அலுவல்களை
முன்னெடுப்பதற்கு மின் சக்தி மற்றும் பதுப்பிக்கத்தக்க
எரிசக்தி அமைச்சர்
கலாநிதி ரஞ்சித்
சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
10. கிராமிய பாலங்களை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி
நிரலில் 34வது
விடயம்)
இலங்கையில்
பின்தங்கிய கிராமங்களில் வாழும் பொதுமக்களுக்கு நன்மைகள்
கிடைக்கக் கூடிய
வகையில் அந்த
அந்த கிராமங்களுக்கு
போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக
சுமார் 4000 பாலங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்
கீழ் 9 மாகாணங்களை
உள்ளடக்கி பல்வேறு
அளவிலான 175 பாலங்களை நிர்மாணிப்பதற்காக
பரிந்துரைகளை கோருவதற்கு அமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட
கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கமைவாக இதற்கான ஒப்பந்தந்தை 37.69 மில்லியன் ஸ்ரேலிங்
பவுனுக்கு Cleveland Bridge UK
Limited என்ற
நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மாகாண சபைகள் உள்ளுராட்சி
மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சர் பைஸர்
முஸ்தபா சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11.சிறிய
மற்றும் நடுத்தரளவிலான
தொழில் முயற்சியளர்கள்
மற்றும் விவாசய
மேம்பாட்டுக்காக நிதிவசதிகளை மேம்படுத்துல் மற்றும் தற்பொழுதுள்ள
வரிமுறையில் தளர்வுகளை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில்
40ஆவது விடயம்)
சிறிய
மற்றும் நடுத்தர
அளவிலான தொழிற்துறை
பிரிவு தொழில்
மற்றும் ஏனைய
சேவை மற்றும்
விவசாய அலுவல்கள்
உள்ளி;ட்ட
தேசிய நடவடிக்கைகளை
மேம்படுத்துவதற்காக பரந்துபட்ட தளர்வான
அடிப்படை மற்றும்
குறைந்த வரி
நடைமுறையுடன் ஒழுக்கமுறையுடனும் தளர்வுபடுத்தப்பட்ட
வரி நிர்வாக
முறையொன்றை ஏற்படுத்துவதுடன் தேவை அரசாங்கத்தினால் அடையாளங்
காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக துரிதமாக மேற்கொள்ளக்கூடிய கீழ் கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு
தேவையான ஒழுங்குகளை
முன்னெடுப்பதற்காக நதி மற்றம்
பொருளாதார அலுவல்கள்
அமைச்சர் என்ற
ரீதியில் பிரதமர்
மஹிந்த ராஜபக்ஸ
சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• தேயிலை
பல சரக்கு
தெங்கு இறப்பர்
நெல், பழவகை,
காய்கறி உள்ளிட்ட
எத்தகைய விவசாய
வருமானம் விசேடமாக
சிறு அளவிலான
தொழிற்துறையாளர்களுக்கு 5 வருட காலம்
வரையில் வருமான
வரி விலக்கழித்தல்
• தேசிய
விவசாய பொருட்களை
பயன்படுத்தி பொதியிடல் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம்
பெறப்படும் வமானத்தின் அடிப்படையிலான வரி வீதத்தை
28 சதவீதம் தொடக்கம்14 சதவீதம் வரையில் குறைத்தல்
• சிறிய
வர்த்க நடவடிக்கையில்
ஈடுபடும் தொழில்முயற்சியாளர்களுக்கு
நிவாரணமாக தற்பொழுது
உள்ள 0.5சதவீதமான
பொருளாதார சேவைக்கட்டணத்திற்கான
வருமான எல்லையை
காலாண்டுக்கு 12.5 பில்லியன் ரூபா
தொடக்கம் 50 மில்லியன் ரூபா வரையில் அதிகரித்தல்
• தேயிலை
இறப்பர்,தெங்கு
அரிசி, மற்றும்
ஏனைய விவசாய
பொதியிடல் தொழிற்துறைக்காக
பயன்படுத்தப்படும் சூரிய Cell Panel களை பொருத்துதல் உள்ளிட்ட புதுபிக்கத்தக்க
எரிசக்தியை பயன்படுத்துவதற்கான மொத்த செலவு அதன்
அலுவலகத்திற்கு அறவிடக்கூடிய வருமான கணக்கின் போது
குறைக்கக்கூடிய செலவாக கவனத்தில் கொள்ளப்படுதல்
• வங்கி
மற்றும் நிதி
நிறுவனங்களில் கடனைப்பெற்று அதன் கடன் நடைமுறைக்கமைவாக
சேவையை மேற்கொள்வதற்கு
முடியாது போன
சிறிய மற்றும்
நடுத்தர அளவிலான
தொழில் முயற்சியாளர்களுக்கு
நிவாரணமாக நிதி
வசதிகளை பயன்படுத்தக்கூடிய
நிலைமையை பெற்றுக்கொடுத்து
அவ்வாறானோரின் வர்த்தக நடவடிககையை மீண்டும் ஊக்குவிப்பதற்காக
நிவாரண திட்டமொன்று
திறைசேரியினால் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துதல்
• குறைந்த
வருமானம் கொண்ட
பயனாளிகளின் குடும்பங்களின் வாழ்க்கை செலவை குறைப்பதற்காக
தற்பொழுது பொருட்கள்
மற்றும் எரிபொருளின
விலையை குறைப்பதற்கு
தேவையான நடவடிக்கையை
மேற்கொள்ளுதல்.
12. இடைக்கால கணக்கறிக்கை -
2019 (vote on account) (நிகழ்ச்சி நிரலில் 41ஆவது
விடயம்)
2019ஆம் ஆண்டில் முதல் 4 மாதங்களுக்கு
தேவையான நிதி
உதவியை பெற்றுக்கொள்வதற்காக
இடைக்கால கணக்கறிக்கையை
சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு
முன்னர் அனுமதி
வங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2019ஆம்
ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரித்து
சமர்ப்பிக்கும் வரையில் 2019 ஆம் ஆண்டின் முதல்
4 மாத காலத்திற்கு
அரசாங்கத்தின் பொதுசேவைகளை முன்னெடுப்பதற்காக
760 மில்லியன் ரூபா செலவை ஈடு செய்வதற்காக
தற்பொழுது பல்வேறு
சட்டங்கள் மூலம்
அதிகாரம் வழங்கப்பட்டுள்ள
செலவை மேற்கொள்வதற்காக
970மில்லியன் ரூபாவுக்கு அரசாங்கத்தின் முற்பண கணக்கு
நடவடிக்கைகளுக்காக 5 பில்லியன் ரூபா
ரீதியில் 1735 பில்லியன் ரூபா செலவை மேற்கொள்வதற்காக
பரிந்துரை அதாவது
(vote on account இடைக்கால நிறைவேற்றுக் கணக்கு) பாராளுமன்றத்தில்
சமர்ப்பிப்பதறற்காக நிதி மற்றும்
பொருளாதார அலுவல்கள்
அமைச்சர் என்ற
ரீதியில் மஹிந்த
ராஜபக்ஸ சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. தகுதி மற்றும் அனுபவத்தைக் கொண்ட
வல்லுனர்களை சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்
சபை உறுப்பினர்களாக
நியமித்தல் (நிகழ்ச்சி நிரலில் 43ஆவது விடயம்)
அரச
கூட்டுத்தாபனம் சட்ட ரீதியிலான சபை உள்ளிட்ட
அரச தொழிற்துறைக்கான
தலைவர் மற்றும்
பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமிக்கும் பொழுது
அந்த அந்த
தொழில் முயற்சியின்
நோக்கம் மற்றும்
இலக்கை பூர்த்தி
செய்யக்கூடிய வகையில் தொழிற்தகுதியுடனான அனுபவம் மிக்க
நபர்களை தலைவர்களாகவும்
பணிப்பாளர் சபை அங்கத்தவர்களாகவும் நியமிக்கப்படுவதன் தேவை அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் தொழில்முயற்சியாளர்களின்
பணிப்பாளர் சபைக்கான உத்தியோகபூர்வ காலத்திற்காக நியமிகக்கப்படும்
உறுப்பினர்கள் (Ex-officio ) தவர்ந்த ஏனையோரை
நியமிக்கும் போது அமைச்சரவையினால் இதற்கு முன்னர்
கடைப்பிடிக்கபட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக்
கொண்டும் இலங்கையின்
அல்லது ஏற்றுகொள்ப்பட்ட
வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராதல்
அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட
தொழில் தகுதி
மற்றும் சம்பந்தப்பட்ட
துறையில் நீண்ட
கால தொழில்
அனுபவத்துடன் நபர்களை நியமித்தல் சம்பந்தப்பட்ட விடயதான
அமைச்சருக்கு முடிந்த வகையில் தேவையான சிபாரிசு
சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி செயலாளரின்
தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன சமர்ப்பித்த
பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment