பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கொடுப்பு
சட்டவிரோதமானதாம்
நிமால்சிறிபால டி சில்வா தெரிவிப்பு
பாராளுமன்றத்தில்
இன்று இடம்பெற்ற
வாக்கெடுப்பு சட்டரீதியலானது அல்ல என்று அமைச்சர்
நிமால்சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற
கட்டத் தொகுதியில்
செய்தியாளர்கள் மத்தியில் அமைச்சர் நிமால் சிறிபால
டி சில்வா
உரையாற்றினார்.
அது
சபாநாயகரின் விருப்பத்திற்கு அமைய இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய
அரசாங்கத்தையோ அல்லது பிரதமரையோ அதன் மூலம் நியமிக்க
முடியாதென்றும் அமைச்சர் கூறினார்..
அமைச்சர்
விமல் வீரவன்ச
உரையாற்றுகையில் . அரசியல் அமைப்பு
மற்றம் நீதிமன்றத்
தீர்ப்பை சவாலுக்கு
உட்படுத்தி இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது என்று
குறிப்பிட்டார்.
இன்றைய
பாராளுமன்ற நிலையியற் கட்டளை மற்றும்
சட்ட ஒழுங்குகளுக்கு
எதிராக இடம்பெற்றதாகவும்
அதனாலேயே ஆளும் கட்சியினர் புறக்கணித்ததாகவும்
சட்டரீதியாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டால்
அதற்கு அரசாங்கம்
முகம் கொடுக்க
தயார் எனவும்
விமல் வீரவன்ச
மேலும் தெரிவித்தார்.
இதன்போது
அமைச்சர் உதயன்
கம்மன்பில மற்றும்
பாராளுமன்ற உறுப்பினர்ரோஹித அபய குணவர்த்தவும் கருத்து
வெளியிட்டனர்.
0 comments:
Post a Comment