ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில்
உருவாகும் மெகா கூட்டணி!
மஹிந்த
- மைத்திரி தரப்புக்கு எதிராக அடுத்த பொதுத்
தேர்தலில் போட்டியிட
ஐக்கிய தேசிய
கட்சியின் தலைமையில்
உருவாக்கப்பட உள்ள மெகா கூட்டணிக்கான யாப்பு
தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன்
இந்த கூட்டணியை
புதிய பெயரிலும்
புதிய சின்னத்திலும்
பதிவு செய்ய
வேண்டும் என்ற
யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக
ஐக்கிய தேசியக்கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மெகா
கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும்
நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டணியில் ஐக்கிய
தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக
ஹெல உறுமய,
இலங்கை கம்யூனிஸ்ட்
கட்சியில் இருந்து
பிரிந்து வந்த
அணியினர், ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சியை சேர்ந்த சிலரும்
இடம்பெற்றுள்ளனர்.
ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சி பல காலமாக தனது கட்சி
சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னங்களில் போட்டியிட்டு
வந்ததுடன் ஐக்கிய
தேசியக்கட்சி தொடர்ந்தும் தனது யானைச் சின்னத்திலேயே
தேர்தல்களில் போட்டியிட்டது. எனினும் அடுத்த பொதுத்
தேர்தலில் புதிய
சின்னத்தின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக்கட்சி
தீர்மானித்துள்ளது.
மெகா
கூட்டணி தொடர்பில்
உருவாக்கப்பட்டுள்ள யாப்பில் கட்சிகளின்
தனித்துவத்தை பாதுகாக்கும் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்
ஒருவர் கட்சியில்
இருந்து விலக்கப்பட்டால்,
கூட்டணியிலும் அங்கத்துவம் பறிபோகும் வகையிலும் சரத்துக்கள்
உள்ளடக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment