பொலிஸாரை நேற்று கொலை செய்தவர் கருணாவா?
நாடாளுமன்றத்தில் நளின் பண்டார
மட்டக்களப்பில்
பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழந்தமை தொடர்பில்
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய
தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இன்று
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில்
பொலிஸ் நிலையத்தில் சேவை செய்த இரண்டு
பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் நேற்று உயிரிழந்தமை
தொடர்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில்
டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக கருணா வெளியிட்ட
கருத்தை அடிப்படையாக கொண்டு நளின் பண்டார
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த
டுவிட்டர் பதிவில், ஐக்கிய தேசிய கட்சியின்
சிலர் என்னை பயமுறுத்த முயற்சிக்கின்றனர்.
2004ஆம் ஆண்டிற்கு முன்னர் தான் யார்
என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டார்.
கடந்த
3 வருடங்களுக்குள் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகவில்லை
எனவும், இந்த கொலைகளுக்கு பின்னால்
கருணா இருப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே
உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில்
கவனம் செலுத்துமாறும் அவர் பாதுகாப்பு பிரிவு
உட்பட அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்
கொண்டுள்ளார்.
பொதுமக்களின்
பணத்தைக் கொண்டு, அமைச்சரவை, இராஜாங்க
மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும்
அவர்களது விடயதானங்களுக்காக, எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்யக்கூடாதென்று, நாடாளுமன்றத்தில் இன்று கொண்டுவரப்பட்ட பிரேரணை
மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நலின் பண்டார எம்.பி சபையில் உரை
நிகழ்த்தும்போது கூறியதாவது,
“மட்டக்களப்பு
மாவட்டத்தில், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர்,
சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஓரிரு தினங்களுக்கு
முன்னர், தனது டுவிட்டர் சமூக
வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டிருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் “நான், மட்டக்களப்பின் கருணா
அம்மான் என்பதை, எவரும் மறந்துவிட
வேண்டாம்” எனப் பதிவிட்டிருந்தார். இதனால்,
பொலிஸாரின் படுகொலைக்கும் கருணாவுக்கும் இடையில் தொடர்பிருப்பதாகவே சந்தேகம்
எழுகின்றது. இது குறித்து, விசாரணை
நடத்தப்பட வேண்டும்.
“நல்லிணக்கத்துக்கு
பங்கம் ஏற்படும் வகையில், கருணா அம்மான் போன்றோர்,
மைத்திரி - மஹிந்த அரசாங்கத்துக்குச் சார்பாகச்
செயற்படுகின்றனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட
வேண்டியது அவசியம். இது பற்றி, வீரவன்சவும்
கம்மன்பிலயும் மௌனம் சாதிக்கின்றனர். இவ்வாறான
சந்தர்ப்பங்களில், இந்த நாட்டில் பொலிஸ்
மா அதிபரொருவர் இருக்கின்றாரா என்பது குறித்தும் தெரியாதுள்ளது.
“ஸ்ரீ
லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராகச் செயற்பட்டு
வரும் கருணா அம்மான், முன்னைய
காலத்தைப் போன்று, மீண்டும் செயற்பட
ஆரம்பித்துள்ளார்” என்றார்.
0 comments:
Post a Comment